மதுரை தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி மோசம் செய்த இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாத்தம்பட்டியைச் சேர்ந்த அணு (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி (25). இருவரும் காதிலித்து வந்துள்ளனர்.

அணுவைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தப் பின்னரே பழக ஆரம்பித்துள்ளனர். காதலின் போது பலமுறை யார் தடுத்தாலும் உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியளித்துள்ளார் மாடசாமி.

இவர்களது காதல் வாழ்க்கைில் இருவரும் நன்றாகதான் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அணுவை திருமணம் செய்துள்ள மறுத்துள்ளார் மாடசாமி.

அணு பலமுறை கெஞ்சிப் பார்த்தும் அவருக்கு மறுப்பையே தனது பதிலாக மாடசாமி தெரிவித்துள்ளார்.

இதனால், வருத்தமடைந்த அணு, தனக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று, திருமங்கலம் காவல் நிலையத்தில் மாடசாமி மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.