காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டம்  நடத்த  மெரினாவில் இளைஞர்கள் கூட இருப்பதாக தகவல் வெளியானது

மெரீனா புரட்சி வெடிக்கட்டும்...மீண்டும் ஒன்று கூடுவோம் என்பது போல,வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர அவசரமாக 250 கும் மேற்பட்ட,போலீசார் மெரீனா கடற்கரையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இந்நிலையில், மீண்டும் இன்று காலை,சில மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சில மணி துளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போராட்டாம் குறித்து விசாரிக்கும் போது,சிபிஎஸ்சி வினாத்தாள் வெளியனா விவகாரம் தொடர்பாக அதற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், மறு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஜல்லிகட்டுகாக நடந்த மெரீனா புரட்சி உலக அளவில் பெரும் புகழ்  பெற்றது.வெற்றியும் கண்டது எனவே,எந்த ஒரு நல்ல திட்டத்திற்கும் இளைஞர்கள் மெரினாவில் கூடினால் தான் அது வெற்றி அடையும் என்ற மனபான்மை இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.