Kovilpatti : மது அருந்தும்போது இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில், தனது நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ், இவரது மகன் முத்துப்பாண்டி (42), இவரது மனைவி ஜெயலட்சுமி (40). இவர்களுக்கு வெங்கடேசன் (19) என்ற மகனும், ராகவி (20) என்ற மகளும் உள்ளனர். கோவில்பட்டி பகுதியில் பெயின்டராக பணியாற்றி வந்த முத்துப்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நேற்று மே 9ம் தேதி இரவு கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். பின்னர் முத்துப்பாண்டியும், அவரது நண்பர்கள் வீரவாஞ்சிநகர் 9வது தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (23) மற்றும் கார்த்திக், முனியசாமி ஆகியோர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். 

6வது வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்.. கிளம்பாக்கம் விவகாரத்தில் அதிர்ச்சி கொடுத்த சிஎம்டிஏ

அப்போது ‘பீர்’ வாங்குவது தொடர்பாக முத்துப்பாண்டிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி பீர் பாட்டிலால் மணிகண்டனை தாக்கியுள்ளார். பதிலுக்கு மணிகண்டன் தனது பைக் பெட்டியில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து முத்துப்பாண்டியின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்தனர். மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை நண்பரே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Shankar : சவுக்கு சங்கர் அலுவலகத்தில் கஞ்சா பறிமுதல்.. வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் - தனிப்படை அதிரடி!