ராமநாதபுரத்தில் காதலி பேச மறுத்ததால் தனது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து தன்னுடைய காதலியின் தோழிக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைத்து பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியைச் சேர்ந்த முத்திருளன் மகன் புகழேந்தி ராஜா (24) வயது. இவர் சிவங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

 

திடீரென அவரது காதலி பேச மறுத்ததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் காதலி பேச மறுத்ததால் தனது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து தன்னுடைய காதலியின் தோழிக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைத்துள்ளார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலி பேச மறுத்ததால் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் புகழேந்தி ராஜா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.