young woman cheat many males through facebook and matrimonial
முகநூல் மற்றும் திருமண இணையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற மென்பொருள் பொறியாளருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இடையே திருமண இணையதளமான மேட்ரிமோனியலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முகநூலிலும் பழகி வந்துள்ளனர்.
திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பாலமுருகனிடம் 45 லட்சம் ரூபாயை ஸ்ருதி பெற்றுள்ளார். எதிர்கால மனைவிதானே என்ற எண்ணத்தில் பாலமுருகனும் பணத்தை வழங்கியுள்ளார். ஆனால் பணம் பெற்றதும் ஸ்ருதியை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், கோவை போலீசாரிடம் புகார் அளித்தார். தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், பி.என்.பாளையத்தை சேர்ந்த ஸ்ருதி, அவரது தாய் மற்றும் சகோதரர் என மூவரை கைது செய்துள்ளனர்.
ஸ்ருதி, பாலமுருகனை மட்டுமின்றி முகநூல் மற்றும் மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் பழகி, மேலும் பல ஆண்களிடம் பல கோடி ரூபாய் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது.
