குழந்தைகள் கடத்தலில் ஈடுபவதாக எண்ணி மூதாட்டி ஒருவரை, கடலில் வீசிய சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்களின் மனிதநேயமற்ற இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள குழந்தைகளை வடமாநில கும்பல் கடத்தி வருவதாக கன்னியாகுமரியில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மணல்குடி கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர், பசிக்காக வீடு வீடாக சென்று உணவு கேட்டுள்ளார்.

பசிக்காக உணவுக் கேட்ட அந்த பெண்மணியை, குழந்தைகள் கடத்துபவர் என்று நினைத்து சில இளைஞர்கள் அவரை மரத்தல் கட்டி வைத்தனர். அது மட்டுமல்லாது அந்த மூதாட்டியை மணக்குடி கடலில் தூக்கி வீசியும் உள்ளனர்.

மூதாட்டி, கடலில் வீசப்பட்டதை சிலர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

மூதாட்டியை கயிறால் கட்டி, அவரை கடலில் வீசும் வண்ணம் படம் பிடிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ பார்ப்போர்கள் நெஞ்சை பதற வைக்கிறது. உணவு கேட்டு வந்த மூதாட்டியிடம் சிறிதும் இரக்கம் இன்றி கடலில் வீசிய இளைஞர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோவை பார்த்தவர்கள்
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.