young man try to sucide jump in shopping mall vadapalani

நாட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை..மக்களிடம் விழிப்புணர்வு இல்ல… அநியாயத்தை எதிர்த்து யாரும் போராட வருவதில்லை …எனவே என்னுடைய சாவு மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வணிக வளாகத்தின் 4 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞரை அங்கு பணிபுரிந்த காவலாளி ஒருவர் கைகளால் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிள்ளது.

சென்னை வட பழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க் கப்பட்டு உயிர்தப்பினார்.

ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

தற்போது நாட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை..மக்களிடம் விழிப்புணர்வு இல்ல… அநியாயத்தை எதிர்த்து யாரும் போராட வருவதில்லை …எனவே என்னுடைய சாவு மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சபரிநாதன் வணிக வளாகத்தின் 4 ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இளைஞரின் தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீ சாரும் பாராட்டினார்கள்.