தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இசக்கி முத்து என்பவர கந்துவட்டி கொடுமை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வட்டிக்கு பணம்வாங்கிய
ஒருவர், திரும்ப தாராத நிலையில், அவரை ஆள் வைத்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தூளிப்பட்டி பகுதியைச் சேர்நத்வர் சிவக்குமார் (32). இவர், சந்தனகாளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முக்கருப்பன் என்பவரிடம் 20,000 ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

வாங்கிய கடன் தொகையை சிவக்குமார் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிவக்குமார் வாங்கிய கடனை அடைக்காதநிலையில் முத்துக்கருபன் ஆத்திரமடைந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்றிரவு கரூர் ரயில் நிலையம் அருகே சிவக்குமார், இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவரை வழிமறித்த சிலர் அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அரிவாளால் தாக்கப்பட்ட சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள், அவர் மீட்டு, கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிவக்குமாருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் ஏற்கனவே கந்து வட்டி புகார் எழுந்துள்ள நிலையில் இந்த கொலை வெளி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.