Chennai Boy Electrocution Video : சென்னையில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கிய நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chennai Boy Electrocution Video : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அப்படி பெய்த மழையால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. இந்த நிலையில் தான் சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞரின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிச்சலற்ற பாஜக அரசு! அமலாக்கத்துறையை ஏவி விடுகிறது! டி.ஆர்.பாலு!
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர். இவருடைய மகன் இப்போது தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். வயது 9 தான் ஆகிறது. வழக்கம் போல் கடந்த 16 ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிந்தார். அவர் வரும் வழியில் தேங்கி இருந்த மழைநீரில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. தேங்கி நீரில் நடந்து வந்த போது மின் சாரம் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ! மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
இதையடுத்து அந்த வழியாக வந்த கண்ணன் தமிழ்செல்வன் என்ற 24 வயது நிரம்பிய இளைஞர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனின் கையை பிடித்து இழந்து வெளியில் கொண்டு வந்துள்ளார். அப்போது சிறுவன் மீது குறைவான அளவில் தான் மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதனால் தான் கண்ணன் கையை பிடித்து இழத்து காப்பாற்ற முடிந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காற்றுடன் சேர்ந்து சுழன்று அடிக்கப்போகுதாம் கனமழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
