Young man raped and killed in the ministers uncles house
அமைச்சரின் மாமனார் வீட்டில் கொலை செய்யப்பட்ட வேலைக்கார பெண், பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ஜெயந்தி நஞ்சுண்டாபுரம் எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள தமிழக அமைச்சர் ஒருவரின் மாமனார் சுந்தரம் பங்களாவில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயந்தி, திருச்சி ரோடு, சிங்காநல்லூர் குளம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் சாலையோர சாக்கடையில் சாக்குமூட்டையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய சிங்காநல்லூர் போலீசார் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், ஜெயந்தி வேலை பார்த்த அதேவீட்டில் டிரைவராக வேலைபார்த்து வரும் மணிவேல் தான் அவரை கொலை செய்துள்ளார் என தெரியவந்தது. மணிவேலுக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகள் உள்ளனர்.
இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, பங்களாவின் உரிமையாளர்கள் வெளிநாட்டுக்கு சென்ற வாய்ப்பை பயன்படுத்தி, ஜெயந்தி மீது இருந்த மோகத்தால் அவரை பங்களாவிற்கு சுத்தம் செய்ய திட்டமிட்டு வரவழைத்தேன். அப்போது அவரை உல்லாசமாக இருக்க முயன்றேன். ஆனால் ஜெயந்தி என்னை தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் நைலான் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொன்றேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், போலீசார் ஜெயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில் ஜெயந்தி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. மணிவேல், ஜெயந்தியை கீழே தள்ளிய போது அவர் மயங்கியுள்ளார். இதை பயன்படுத்தி மணிவேல், ஜெயந்தியை கற்பழித்துள்ளார். அதன்பின்னர், நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார் எனத்தெரியவந்தது.
