young girl abuse in train college student arrest

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சிவ்பூரை சேர்ந்த இளம்பெண், மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயிலில் கொடைரோடு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில், சேலம் ஜங்ஷன் சென்றடைந்த போது அதே ரயிலில் பயணம் செய்த மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த பிரகாஷ் ராஜ் என்ற கல்லூரி மாணவர், அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் அலறவே, சக பயணிகள் பிரகாஷ்ராஜை பிடித்து ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், அவரைக் கைது செய்தனர்.