3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட  இளம் தம்பதி, எதற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் , எண்ணூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார் இவர்கள் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும் வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த  அக்கம்பக்கத்தினர்.  ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். மனைவி தனலட்சுமியோ தன் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இருவரும்  ஒரே அறையில் இருவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர்.

இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, நேற்று வெங்கடேசுக்கு  பிறந்தநாள் என்பதால்,  அதை கணவன்-மனைவியும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.  பிறந்தநாளுக்கு வெட்டப்பட்ட கேக்-கும் வீட்டில் இருந்தது.

இந்த தற்கொலைகள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார். வீடு முழுக்க ஏதாவது தகவல்கள், ஆதாரம்  கிடைக்குமா என சோதனையிட்டதில். ஒரு கடிதம் கிடைத்தது. அதில்  எங்களது மரணத்திற்கு  யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. அது தனலட்சுமி தன் கைப்பட எழுதிய கடிதம் என்றாலும் இளஞ்சோடிகளின் தற்கொலைக்கான  உண்மையான காரணம் என்ன என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.