நேற்றைய தினம் சென்னையில்... ஆங்காங்கு சிறு போராட்டக்காலமாகவே மாறியது. பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பொதுமக்கள் என பலர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற இருந்த, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய ஐபிஎல் விளையாட்டை தவிர்க்க கூறியும்... விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்வேறு தடைகளை தாண்டி தங்கி இருந்த ஓட்டலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் பாதுகாப்பாக சேப்பாக்கம் மைதானத்தை அடைந்தனர். 

இருப்பினும் விடுதலை சிறுத்தை கட்சியினர், கிரிக்கெட் விளையாடுக் கொண்டிருந்த போது, விளையாட்டுக்கு எதிப்பு தெரிவிக்கும் விதத்தில், மைதானத்தில் செருப்புகளை கழற்றி வீசி கூட தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.