புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சென்னை பல்லவன் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓய்வூதியம், பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து மண்டல அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் ஓய்வு பெற்றோர், பணியில் உள்ளோர் என அனைத்து தரப்பினரும் திரளாகக் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு அவர்களுக்கு உரிய பலப்பலன்களை வழங்காமல் தொடர்ந்து கால தாமதம் செய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இதில் எல்.பி.எஃப், சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.