Worker brutally murder in forest area who start to visit his Wife and a children ...
சிவகங்கை
மனைவி, பிள்ளைகளை பார்க்க வருவதாக ஆசை ஆசையாய் கூறிய சிவகங்கையை சேர்ந்த தொழிலாளி காட்டுப் பகுதியில் முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ளது தொப்பையாறு வனப்பகுதி. இங்கு நேற்று இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து பெரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சடலமாக கிடந்தவரின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சிவகங்கை மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மலையனூரை சேர்ந்த பச்சமுத்து மகன் இந்திய குடிமகன் (32), என்பதும், திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருவதும், இந்திய குடிமகன் கர்நாடக மாநிலத்தில் தனியார் கிரானைட் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்கு வருவதாக மனைவியிடம் ஆசையுடன் கூறியவர் வனப்பகுதியில் அடித்துக் கொலைச் செய்யப்பட்டு சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இந்திய குடிமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வனப்பகுதிக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து காவலாளர்கள், இந்திய குடிமகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரும்பாலை காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரானைட் குவாரி தொழிலாளி கொன்று முகத்தை சிதைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
