Women in Kerala are not safe to walk in the daylight - an inspiring speech actress Khushboo
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன்ஆட்சியில் பெண்கள் பகலில் நடக்ககூட பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமானகுஷ்பு கடும் குற்றச்சாட்டு கூறினார்.
நடிகை கடத்தல்
நடிகை பாவனா கடந்த 2 வாரத்துக்கு முன் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து காரில்திருச்சூர் திரும்பிக் கொண்டு இருந்தபோது அவரை ஒரு கும்பல் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது.
அதன்பின், போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போராட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பாவனா மீதான பாலியல் கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கோழிக்கோடு நகரில் மாவட்ட காங்கிரஸ் குழு சார்பில் கேரளத்தை காப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர்சுதீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
பகலில் கூட
கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் குற்றவாளிகளுக்கு கேரள அரசு துணை போவது தான். கேரளாவில் பகலில் கூட நடமாட முடியாத நிலை உள்ளது.
பினராய் விஜயன் ஆளும் கேரளம் கொடும் கிரிமினல்கள், குற்றவாளிகள் ஆளும் கேரளாவாக மாறி உள்ளது. எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் மாநில அரசே குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது
பாதுகாப்பான ஆட்சி
இதனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சியில் உம்மன் சாண்டியின் திறமையான ஆட்சியால் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.
ஆனால் தற்போது பினராய்விஜயனின் 8 மாத ஆட்சியில் அரசியல் கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து விட்டது.
கைது உண்டா?
கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பெண்ணின் வழக்கிலாவது குற்றவாளிகளை கைது செய்தது உண்டா?
குற்றவாளிகளுக்கு ஆதரவு?
கேரளாவில் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த நடிகை கடத்தப்பட்டதில் சதி இல்லை என்கிறார் முதல்வர்பினராயி விஜயன்.
விசாரணையை திசைதிருப்புகிறார். மாநில போலீசாரும் முதல்வருக்கு ஆதரவாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாகும் செயல்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
