கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பள்ளி செல்லும் குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வருபவர் கவிதா என்ற சிறுமி.

இந்நிலையில் இன்று காலை கவிதா பள்ளிக்கு செல்லும் போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பெண்ஒருவர் குழந்தையை எடுத்து கொண்டு ஓட முயற்சித்தார்.

அப்போது கவிதாவின் தாயார் சண்டையிட்டு குழந்தையை அந்த மர்ம பெண்ணிடம் இருந்து மீட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கம்  இருந்தவர்கள் உடன் வந்து அந்த பெண்னை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் காலதாமதமாக வந்த போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி டிஎஸ்பி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.