வேலூரில் கழுத்தறுத்தும், கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை .ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி என்று கிராமத்தில் வசித்து வந்தவர் கண்ணியம்மாள் (55).
இவர் தனது வீட்டில் மர்மான முறையில் கழுத்தருத்தும் கத்தியால் குத்தியும் கொடுரமான முறையில் கொலைச் செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அவளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவளூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
