Woman killed in the engagement position

நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார். சிவசுப்பிரமணியனுக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் நீண்ட காலமாகவே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இரு குடும்பத்தாரிடையேயும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது. வரன் அமைந்த நிலையில், ஹேமாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று இரவு சிவசுப்பிரமணியன் வீட்டுக்கு, அவரது அண்ணன் மகன் சக்திகுமார் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சக்திகுமார், சிவசுப்பிரமணியனை தான் கொண்டு வந்த கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ஹேமா, இதனை தடுக்க வந்தார். சக்திகுமார், அவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ஹேமா, ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, அருகில் இருந்தோர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஹேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிவசுப்பிரமணியம், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார். ஹேமாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.