கோயம்பேடு போலீசார் பிஎச்டி மாணவியிடம் நடந்து கொண்டவிதம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு போலீசார் என்றாலே பொதுமக்கள் பயணிகள் கதை க்தையாக சொல்கிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிஎம்பிடியில் தற்போது இன்ஸ்பெக்டராக வந்திருப்பவர் நரம்படி சரவணன். பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் மணலி நியூ டவுன் காவல் நிலையத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு இங்கு பணியமர்ந்தார்.


இவர் வந்த பிறகு போலீசாருக்கு இன்னும் கையை அவிழ்த்து விட்டது போல் ஆகி விட்டது. ஏற்கனவே பயணிகளிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ளும் போலீசாருக்கு இதற்கு முன்னர் இருந்த இன்ஸ்பெக்டர்கள் எச்சரிக்கை கொடுத்துகொண்டே இருப்பார்கள். 


ஆனால் சரவணன் வந்த பிறகு சி.எம்.பி.டி.யின் நிலையே தலைகீழாக ஆகிப்போனது என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள்.

ஊர் போவதற்காக குடும்பத்துடன் வந்திருக்கும் பெண்களிடம் , காதலர்களிடம் , இளம் பெண்களிடம் தரக்குறைவாக பேசுவது. யாராவது என்ன சார் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால் ரொம்ப பேசுன புடிச்சு பிராத்தல் கேசுல போட்டுவிடுவேன் என்று கூறுவது. இதுதான் சி.எம்.பி.டி போலீசாரின் வழக்கமான யுக்தி.

அடுத்து பயணிகளை காலால் எத்துவது, தூங்கி கொண்டிருக்கும் பயணிகளை அடிப்பது என சாதாரணமாக தினசரி காட்சிகளாக பார்க்கலாம் என்கின்றனர். காதலர்கள் , இளம்பெண்களை இரவு நேரத்திலும் ஸ்டேஷனுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்வது ஸ்டேஷனில் அமர வைப்பது வாடிக்கையாம்.

பிராத்தல் கேசுல போடுவேன் என்று சொல்லும் போலீசார்  கோயம்பேடு காவல் நிலையத்தில் நடக்கும் பிராத்தல்களை தடுக்கிறார்களா? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டபோது ,  நீங்க வேற சார் 7 மணிக்கு மேல பாருங்கள் சாதாரணமாக போகும் பயணிகளை கையை பிடித்து இழுப்பார்கள் அந்த அளவுக்கு விபச்சார அழகிகள் கூட்டம் உண்டு என்றனர். 


சும்மா இருப்பவர்களையே பிராத்தல் கேசுல போடுவோம்னு சொல்ற போலீசாருக்கு இவர்கள் கிடைத்தால் லட்டு மாதிரி கேஸ் போடுவார்களே என்று நாம் கேட்ட போது 2000 ரூபாய் தாளை கொடுத்த வாடிக்கையாளரை கடைக்காரர் பார்ப்பது போல் பார்த்தார் அந்த நபர்.

 அந்த நபர் சார் எந்த ஊர்ல இருக்கீங்க அவர்கள் மாமுல் முறையா கொடுத்து விடுகிறார்கள் அப்புறம் என்ன கேஸு, அதைவிட இங்க சில லாட்ஜுகள் இருக்கு அத்தனையும் பிராத்தல் தான் வருமானம். முறையா மாமுலும் போய்விடுகிறதாம், எல்லாத்துக்கும் மேல இன்ஸ்க்கு அங்க ஒரு ரூம் பர்மனண்டா இருக்காம் அதுல தான் ஐயா ரெஸ்ட் எடுப்பதாம் என்று கேலியாக சொன்னார். 


இதைவிட கொடுமை என்னன்னா சார் , பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் ஒரு பாழடைந்த கட்டடம் உள்ளது இங்கு பகீரங்கமாக மலிவு முறை விபச்சாரம் நடக்கும் போலீசார் கண்டு கொள்ள மாட்டார்கள் அங்கு நடந்த தகராறில் பலர் காயப்பட்டுள்ளனர். என்று நம்மை பயமுறுத்தினார். 

இன்ஸ்பெக்டர் நரம்படி சரவணன் வந்த பிறகு எல்லாம் சரியாகும் என்று பார்த்தால் முன்னைக்கு இப்ப மோசமாகி விட்டது சார் , இவர் யாரையும் மதிப்பதில்லை. பண்டிகை காலங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடுவார்கள் , இதுதவிர என்.எஸ்.எஸ் , மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்கு வருவார்கள்.


 அவர்களை இதற்கு முன்பிருந்த இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார் , சிவகுமார் போன்றனவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்வார்கள். அதே போன்று இந்த ஆண்டு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வந்த போது இன்ஸ்பெக்டர் சரவணன் மரியாதை குறைவாக நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்கிற பாணியில் சொல்லி திருப்பி அனுப்பி விட்டதாக ஸ்டேஷன் போலீசாரே சொல்லி ந்வருத்தப்படுகின்றர்.


நரம்படி சரவணன் செயலால் இன்று அமைச்சரே அவமானப்பட்டு ஓட வேண்டியதாக போய்விட்டது , இன்னும் மகளிர் ஆணையம் , மனித உரிமை ஆணையம்னு எத்தனை பிரச்சனைகள் இந்த பெண்ணால் வரப்போகுதோ என்று மூத்த போலீஸ் ஒருவர் வருத்தப்பட்டார்.