திநகரில் தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்புய் ஏற்பாடு மற்றும் பொதுமக்கள் உடமைகள் பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பை அதிகரித்து கண்காணிப்பு கேமரா அமைத்தனர். இந்நிலையில் இன்று மிகப்பெரிய ஜேப்படி செய்த பெண்ணை போலீசார் பிடித்து 18 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் சைலஜா ரெட்டி(65). இவர் தங்க வைர நகைகள் வாங்குவதற்காக நேற்று தனது உறவினர்களுடன் தி.நகருக்கு வந்தார். பல கடைகள் ஏறி இறங்கி தனக்கு விருப்பமான வளையல், நெக்லஸ், செயின், கம்மல் என வித விதமாக வாங்கினார். மொத்தம் ரூ 16 லட்சத்துக்கு நகைகள் வாங்கினார்.

பின்னர் சாலையோர ஃபாஸ்ட் புட் கடையில் அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன் சைலஜா ரெட்டி நகைப்பயை பார்த்தபோது அது மாயமாகி விட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பதறிப்போன சைலஜா நகைப்பையை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்துள்ளார் கிடைக்கவில்லை உடனடியாக இதுபற்றி மாம்பலம் காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். 

உடனடியாக போலீசார் அங்குள்ள குமரன் ஸ்டோர்ஸ் கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது ஒரு பெண் ஒருவர் சைலஜாவின் பையை திருடி செல்வது மைலாப்பூரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மனைவி மேரி(56) என்பது தெரிய வந்தது. மேரி பழைய குற்றவாளி என்பதும் அவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும்,அதை வைத்தே ஏமாற்றி வருவதும் தெரிய வந்தது. 

பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்றுத்தான் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி திநகர் உஸ்மான் சாலையில் , ரங்கநாதன் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தினர். இன்று ஒரு குற்றவாளி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.