Asianet News TamilAsianet News Tamil

“ ஏப் 1 முதல் ஆதார் எண் இல்லாமல் புதிய வாகனங்கள் பதிவு முடியாது”...போக்குவரத்து துறை அதிரடி..  

without athar we cant register two wheelers and car in tamil nadu
without athar-we-cant-register-two-wheelers-and-car-in
Author
First Published Mar 15, 2017, 1:07 PM IST


“ ஏப் 1 முதல் ஆதார் எண் இல்லாமல் புதிய வாகனங்கள் பதிவு முடியாது”...போக்குவரத்துத் துறை அதிரடி..  

இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என   தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை . இந்நிலையில், தமிழ்நாடு  போக்குவரத்துத்துறை  ஆணையர் திரு.சத்ய பிரதா சாஹூ,  தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஒ க்களுக்கும் அறிவிப்பு ஆணை பிறப்பித்துள்ளார்.

அதில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மூதல் புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர  வாகனத்தை பதிவு செய்ய, ஆதார் எண், பான் எண், மொபைல் எண் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய  வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி வரும் காலங்களில் எந்த அரசு பதிவாக  இருந்தாலும் ஆதார் எண் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

ஆதார் எண் இல்லாமல் இனி ஒரு அணுவும் அசையாது என்ற  நிலைமை ஏற்பட்டுள்ளது .ஆதார் எண்ணை பொறுத்தவரை,  ரேஷன் கடை, வங்கி கணக்கு என அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது  இருசக்கர வாகனம் பதிவு செய்வதற்கும் ஆதார் கட்டாயமாகியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios