within 4 days chennai may affect very heavily as per panchaangam

4 நாட்கள் சென்னை வெள்ளத்தில் மிதக்கும்...பஞ்சாங்கம் எச்சரிக்கை...! பலிக்குமா..? பீதியில் மக்கள்...

மழையை பொறுத்தவரை கடந்த இரண்டு மாத காலமாகவே தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது...

தற்போது ஓகி புயலால்,கன்னியாகுமரி,ராமேஸ்வரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.இவை அனைத்துமே பஞ்சாங்கம் ஏற்கனவே கணித்தபடி தான் நடக்கிறது.

அப்படி பஞ்சாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா ?

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார்.

அதன்படி,சில தேதியையும்,அந்த தினத்தில் நிகழ கூடியவற்றையும் கணிக்கப்பட்டு உள்ளது

12.12.2017 சென்னை இருளில் முழ்கும் ! பிரளயம் ..! (அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து !)

இந்த ஆண்டு பஞ்சாங்கம்

இந்த பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று-மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது...அதன்படியே தான் நடந்து வருகிறது,ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பெரும்பாலான ஏரிகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன.சில ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

கார்த்திகையில் கன்னியாகுமரி பாதிக்கும்

கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என ஏற்கனவே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு இருந்தது.கடலூர், ராமேசுவரம் பகுதியும் மழையால் பாதிக்கும் என தெரிவிக்கப் பட்டு இருந்தது

அதன்படியே நடந்தது.இந்நிலையில் அடுத்து வரும் சில தேதிகளும்,அந்த தேதியில் நடக்க விருப்பதாக கூறப்படும் நிகழ்வுகள் தற்போதே சற்று பீதியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

காரணம் முன்னதாகவே பஞ்சாங்கம் என்ன சொல்கிறதோ அது தான் நடந்து வந்தது.

முக்கயமான ஒன்று

இந்தஆண்டு சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து ஜோதிடர் கே.என் நாராயண மூர்த்தியை பிரபல நாளிதழ் தொடர்பு கொண்டு பேசியது ....அதில்

9-ந்தேதி முதல் 12-ந் தேதிவரை சென்னை பாதிக்கும், உலுக்கும், மிதக்கும் என தெரிவித்துள்ளதாக கூறுகிறார்.

அதாவது 4 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து சென்னை நகரம் பாதிக்கப்படும், வெள்ளத்தில் மிதக்கும்.மின்சாரம் இருக்காது என்பதே பொருள்படும்

இதன் காரணமாக அடுத்து வரும் சில நாட்களும்,எப்போது தான் இந்த டிசம்பர் மாதம் பயமில்லாத ஒரு மாதமாக கடந்து செல்லுமோ என்ற நிலை ஏற்பட்டு உள்ளது

அதே வேளையில்,இது வரை பஞ்சாங்கம் சொன்னபடியே நடந்து வந்த நிலையில்,வரும் அடுத்து சில நாட்களில் பஞ்சாங்கம் சொன்னபடியே சென்னையில் பாதிப்பு ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .

இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....