மெட்ரோ ரயில் நிலையங்களில் 'வைபை' சேவையை கொண்டு வருவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'வைபை' வசதி ஏற்கனவே தொடங்கப்பட்டு, ரயில் பயணிகள், இணையதள சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 'வைபை' சேவையைக் கொண்டு வர மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக, உயர்மட்ட பாதையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் 'வைபை' வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சுரங்க ரயில்நிலையங்களிலும் 'வைபை' வசதி கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டும் அல்லாமல், இணையதள சேவையை வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
