Wife sister raped! Shocking incident in Chennai

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சென்னை, வியாசர்பாடியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை சுமார் 7.30 மணிக்கு, மேற்கு மாம்பலத்தில், மகளை கல்லூரியில் விடச் சென்றவர் மர்ம நபர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த மகளையும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காலையில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சென்னை, வியாசர்பாடியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை, வியாசர்பாடி, திடீர் நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவரின் வீட்டுக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்ற ரவுடிகள், வீட்டின் உரிமையாளர் கழுத்தின் மீது கத்தியை வைத்து மிரட்டியுள்ளது. அப்போது அவரின் மனைவி மற்றும் அவரது தங்கை அங்கு வந்துள்ளனர்.

அந்த கும்பல், வீட்டின் உரிமையாளரின் மனைவியையும், அவரது தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்தது. இதன் பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது. கண்ணெதிரே மனைவி மற்றும் தங்கை பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதன் பின்னர், அந்த இளைஞர், எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாலியல் வன்முறைக்கு ஆளான இளைஞரின் மனைவி மற்றும் அவரது தங்கையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.