Wife of the murderer of the husband Roundup when the next killing plan

கணவரை கொன்றவர்களை பழி வாங்க நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு ப்ளான் போட்ட பெண் தாதா எழிலரசி உள்பட 13 பேரை ரவுடிகளை கூண்டோடு வளைத்தது போலிஸ்.

காரைக்காலைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த வினோதா, ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரை வைத்து ராமுவையும், எழிலரசியையும் தாக்கினார். கூலிப்படையினர் தாக்குதலில் ராமு இறந்துவிடவே எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து உயிர் தப்பிய எழிலரசி வினோதாவை கொல்ல திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கடந்த 2014-ஆம் ஆண்டு வினோதாவை கொடூரமாக கொலை செய்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசியை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில் கடந்த டிசம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் புதுவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த காரைக்கால் பெண் தாதா எழிலரசி தலைமையில் 13 பேர் ரவுடி கும்பலை நேற்று போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2010ல் நடந்த தனது கணவர் ராமு கொலைக்கு பழிக்குப்பழியாக உறவினரான காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜெய் ஆனந்த்தை தீர்த்துக்கட்ட காலாப்பட்டு சிறையிலுள்ள மர்டர் மணிகண்டனின் உதவியுடன் எழிலரசி திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து எழிலரசி உள்ளிட்ட 14 பேர் கும்பலை 5 பிரிவுகளின்கீழ் கைது செய்த போலீசார் அனைவரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 5 கத்திகள், ஒரு கார், 12 மோட்டார் சைக்கிள், 18 செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 இதே போலத்தான் கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரை கூலிப்படையை ஏவி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.