உதகையில் நடந்த விழாவில் பங்கேற்றதால் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நீலகிரிக்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்தும், நீட் தேர்வு ரத்து குறித்தும் பேசினார்.

உதகையில் நடக்கும் விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்ததால், பாம்பனில் நடக்கும் ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு வந்ததில் பெருமைப்படுகிறேன். திமுக ஆட்சியில் நீலகிரியின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியின மக்கள் வசிக்கும் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதியில் மட்டும் 10,000 வீடுகளுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்போடு, திராவிடக் கொள்கையின் அடிப்படையில் வலுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். பட்டினிச்சாவின்றி வாழும் ஒரே மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டிலேயே மிகுந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

குப்பை மேடாக மாறிய பிரிட்டன் நகரம்! சாலையில் குவிந்த 17,000 டன் குப்பை!

உதகையில் வளர்ச்சித் திட்டங்கள்:

மருத்துவ சேவைகள் நெடுஞ்சாலைகள் இல்லாத பகுதிகளிலும் மக்களை தேடி செல்கின்றன. வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. கூடலூரில் ரூ.26 கோடியில் 300 புதிய வீடுகள் கட்டப்படும். பழங்குடியினரை மையமாகக் கொண்டு ரூ.10 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டியில் மல்டி-லெவல் கார் பார்கிங் கட்டப்படும். மேலும், 10 சுற்றுலா பேருந்துகள் மூலம் புதிய சேவைகள் தொடங்கப்படுகின்றன. நீலகிரி நடுகாணியில் ரூ.3 கோடியில் ஒரு சுற்றுச்சூழல் மையம் அமைக்கப்படுகிறது.

Scroll to load tweet…

உதகையில் தொடங்கிய ஊட்டச்சத்து திட்டம்:

மக்களின் ஆதரவு பூரணமாக உள்ளதால் திராவிட மாடல் ஆட்சி தன்னம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேயிலை தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நடைமுறைக்க வந்துள்ளன. கடந்த ஆட்சியில் உதகை மருத்துவமனைக்கு எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை. எடை குறைவான குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து திட்டம் உதகையில் தொடங்கப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி, நீலகிரிக்கு அழைத்து வந்தது திமுக ஆட்சிதான். 2019-ல் நிலச்சரிவின்போது நான் உதகையில் இரு நாட்கள் தங்கியிருந்தேன். எனது குரலுக்குப் பிறகு, அப்போதைய முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பட்டினி சாவின்றி வாழும் மாநிலமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களை விட, தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 9.69% எனவும், மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலம் எனவும் தெரிவித்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும். எந்த தொகுதியும் நீக்கப்படாமல் பாதுகாப்பது பற்றிய உறுதியை தமிழகத்தில் நின்று சொல்ல வேண்டும். தமிழர்கள் கொண்டிருக்கும் நியாயமான அச்சத்தை பிரதமர் அகற்ற வேண்டும்.

வக்ஃபு திருத்த மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

பாம்பன் விழாவில் பங்கேற்காதது ஏன்?

இன்று நான் உதகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காரணத்தினால், பாம்பனில் நடக்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை. இதை பிரதமரிடம் முன்பே தெரிவித்து வைத்தேன். அந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசும், ராஜகண்ணப்பனும் பங்கேற்றுள்ளனர்.

கலைஞரும் ஜெயலலிதாவும் இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் வரவில்லையே. ஜெயலலிதா மறைந்தபின், அதிமுக ஆட்சியின் காலத்தில் மத்திய அரசு நீட்டை கட்டாயமாக்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரே நீட்டை தமிழகத்தில் அனுமதித்தனர். தற்போது, நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம். மத்தியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நீட் விலக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளிக்கப்படாமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? பாஜகவுடன் இருக்கும்போது, இபிஎஸ் ஒருமுறையாவது நீட் எதிர்ப்பு குறித்து குரல் கொடுத்ததுண்டா?

வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக, ஆ.ராசா மற்றும் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பேசினர். வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆ.ராசாவின் பெயரில் வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும். தமிழகத்தின் மேம்பாட்டைத் தடுக்க பாஜக சுயநலப்பூர்வமாக செயல்படுகிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விநாயகர் சிற்பத்துக்காக சுதர்சன் பட்நாயக்கிற்கு 'தி ஃப்ரெட் டேரிங்டன் விருது'