who was found guilty of fraud of Rs 2000 crore has surrendered in court today
நிதி நிறுவனம் நடத்தி 2000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலையில் நிர்மலன் என்பவர் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார்.
இவரிடம் கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தில் 2000 கோடி ரூபாய் வரை பண முதலீடு செய்தனர்.
ஆனால் அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும், கேரள போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிதி நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நிதி நிறுவன அதிபர் நிர்மலன் தலைமறைவானார். அவரைத் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நிதி நிறுவன அதிபர் நிர்மலன், மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.
