கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் யார் இந்த நிர்மலாதேவி? அவரது சொந்த வாழ்க்கை எப்படி என்பது குறித்து வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் பூர்வீகமாக கொண்ட நிர்மலா தேவியின் தந்தை பரமசிவம் இவர் தனியார் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர். 

46 வயதாகும் நிர்மலாதேவி, தேவாங்கர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், தோவாங்கர் மகளிர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும், தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பும் பயின்றதோடு மதுரை பல்கலைகழகத்தில் எம்எஸ்சி எம்பில் பிஎச்டி படித்துள்ளார்.

(எம்.ஏ. எம்.பில். பி.ஹெச்.டி) கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

இதனையடுத்து அவர் பயின்ற தேவாங்கர் கலைக் கல்லூரியில் கடந்த 3-01-2008 ம் நாளில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

இவரது குடும்ப வாழ்க்கை; இவரது கணவர் சரவண பாண்டி. வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அருப்புகோட்டை வந்துள்ளார்.  சொக்கலிங்கபுரத்தில் வசித்து வரும் இவர்  அருப்புக்கோட்டை நகராட்சி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. 

முதல் மகள் தனியார் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படித்து வருகிறார்.

இரண்டாவது மகள் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

ஆனால் மகள்கள் இருவரும் பேராசிரியையுடன் இல்லை, அவரது கணவர் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.