அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தில் பாடம் எடுத்து வருகிறார் டாக்டர் ரஜினி கலையரசன்.

ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியில் டாக்டராக இருப்பவர் மருத்துவர் ரஜினி கலையரசன்.இவர் அதே பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்று..விடாமுயற்சியில் அரசு பள்ளியில் படித்து..நல்ல மதிப்பெண் பெற்று திருநெல்வேலி மருத்துவக்கல்லாரியில் மருத்துவராக படித்து..அதே உத்தனபள்ளி கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்..இளம் மருத்துவர்.

தினமும் காலை மாலை என ஓய்வு நேரங்களில் உத்தனபள்ளி அரசு பள்ளியில் சொந்த ஆர்வத்தில்..தமிழ் வகுப்பெடுக்கிறார் என்றால் பாருங்கள்.அந்த பள்ளி வளர்ச்சியிலும் அதிகம் அக்கறை கொண்டு உள்ளார். இவர் பள்ளிக்குள் நுழைந்ததுமே மாணவர்களின் ஆரவாரம் அப்படி உள்ளது. இவரின் இந்த சுயநலமில்லாத தொண்டை பாராட்டி அந்த பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்து உள்ளனர்.

தான் படித்த பள்ளிக்காகவும், ஏழை மக்களின் கல்விக்காகவும், ஒரு மருத்துவரே  ஆசிரியராக மாறி பாடம் எடுக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.