மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி இன்று திடீரென காலமானார். 

காஞ்சி ஜெயேந்திரர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் காஞ்சி மடத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை  அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காஞ்சி ஜெயேந்திரர் திடீரென  உயிரிழந்தார். 

யார் இந்த காஞ்சி ஜெயேந்திரர்...?
காஞ்சி ஜெயேந்திரர் 1935 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்ரமண்யம் மகாதேவ ஐயர். 

சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார்.

இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்தார். 

காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்கியர் ஜெயேந்திரர். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா நாட்டில் வாழ்பவர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். 

இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.

நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திரர்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரது ஜாமின் மனுவை கீழ் நீதிமன்றம் நிராகரித்தது. 

பின்னர், ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார்.இதுகுறித்த வழக்கு புதுவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.