whether tomorrow tsunami will come ?

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!

தென் தமிழக கடற்பகுதியில், தொடர்ந்து மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஈரப்பதமான காற்று வீசுவதால், தென் தமிழக கடலோர பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கடல் அலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும்,சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப் படும் என்றும் கூறப்பட்டு உள்ளது

வருவாய் நிர்வாக ஆணையர் இது பற்றி தெரிவிக்கும் போது..

நாளை காலை சரியாக 8.30 மணி முதல் மறுநாள் இரவு 11.30 மணி வரைக்குள் (21,22 ஆம் தேதி ) கடல் அலையானது 11. 5 அடி வரை உயர்ந்து சீற்றத்துடன் வரும் என குறிப்பிட்டு உள்ளார்

அதுவும், 18 முதல் 22 வினாடிகள் அளவில் இந்த அலைகள் வரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மேலும் சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமியா..?

மேலும் திடீரென இது போன்ற அலைகள் வருவதால் இது சுனாமி அறிகுறியா என்ற கேள்விக்கு....இது சுனாமி இல்லை என்றும், எப்பொழுதும் வரும் சாதாரண கடல் சீற்றம் தான் ஆனால் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இருப்பதால் இது போன்று நிகழ உள்ளது என்று தெரிவித்து உள்ளார்

அதே போன்று நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு பொழுது போக்கிற்காக கூட யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்களும் மீன் பிடிக்க கடல்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.