ஏப்ரல் 10 கிரிக்கெட் பார்க்க போவீங்களா...?இல்ல ஜேம்ஸ் வசந்த் சொல்வதை கேட்பீங்களா..?

காரிவி மேலாண்மை வாரியம்அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  ஆலையை மூட வேண்டும் என வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு   அமைப்பினர், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்து  உள்ளனர். போராட்டத்தின் முடிவில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,

"நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.

நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம்.

ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம்,கிரிக்கெட்நேரடியாக பார்க்கவேண்டும் என நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியவர்கள் தமிழக மக்களுக்காக ஜேம்ஸ் வசந்தன் சொல்வதை கேட்பார்களா..? அல்லது நிற்க கூட இடமில்லாமல் நிரம்பி வழியுமா ஸ்டேடியம்...என பொறுத்திருந்து பார்க்கலாம்.