ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுமே ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில். ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது நாளாக , ஜல்லிகட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் , மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என , முழு ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள் இளைஞர்கள்

இந்நிலையில், தற்போது, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஆனால், போரட்டக்காரர்களோ எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம் , ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர தீர்வு மட்டுமே வேண்டும், பீட்டாவை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என, உறுதியாக உள்ளனர் .

இதனால், ஐந்தாவது நாளாக தொடந்து போராடி வரும் இளைஞர்கள் , தங்களுடைய போராட்டத்தை கைவிட போவதாக இல்லை என்றும், ஜல்லிக்கட்டுகான நிரந்தர தீர்வு , அதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் நிரந்தர தீர்வு என்றால், அந்த தீர்வு வரும் வரை , தங்களது போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கின்றனர்.