ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவு!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விளக்கமான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நியமனம் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டு அந்த ஆணையத்தின் அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அவலச் சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, அதிகாரிகற் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுத்தால் போதும் என முடிவுசெய்த்து. ஏற்கெனவே கொடுத்த தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை போதும் எனவும் முடிவெடுத்தது.
இதனையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது. அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அறிக்கையைத் தயாரித்துவிட்டது என்றும் அடுத்த விசாரணையின்போது சமர்ப்பித்துவிடுவதாகவும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அறிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திமுக தலைவராக ஒரு தொண்டரை நிறுத்துவாரா? ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்