காமகாதலுக்கு குழந்தைகளை பலி கொடுத்த அபிராமி..!

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை தற்போது புழல் சிறையில் எந்த  மனநிலையில் உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2 மாதமாக பிரியாணி கடைக்காரரான சுந்தரத்துடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த அபிராமிக்கு, கள்ளக்காதல் மோகம் அதிகமாகவே, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கணவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ஓடி போக முடிவு செய்த அபிராமி, பாலில் விஷம் கலந்து குழந்திகைளை கொன்று விட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இழந்து வாடி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கல்நெஞ்சம் கொண்ட அபிராமியை போலீசார் மடக்கி பிடித்து பின்னர் அவரை  புழல் சிறையில் அடைத்தனர்.

அபிராமி புழல் சிறையில் எப்படி உள்ளார் தெரியுமா..? 

சரியாக உணவு சாப்பிடுவது இல்லையாம்.....

எப்போதும் சோகமாகவே முகத்தை வைத்துக் கொண்டு உள்ளாராம்... 

யாருடனும் பேசாமல், கண்ணீர் கலங்கியபடி உள்ளாராம்.

சக பெண் கைதிகள் இவரிடம் பேச வந்தாலும், அவர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக தனிமையில் அழுதுக்கொண்டே உள்ளாராம்.

அதையும் மீறி, ஒரு சில பெண் கைதிகள், அபிராமியிடம் பேச வந்தாலும் அவர்களை பார்க்க கூட  மாட்டேன்றாராம்... 

இப்படி இருக்கும் போது, சில சமயத்தில் ஆவேசத்துடன் கண்கள் சிவந்து, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்....பெற்ற பிள்ளைகளை கொன்ற அவருக்கு, குழந்தைகளை இழந்துவிட்டோமே என நினைத்து அழுகிறாரா அல்லது சுந்தரத்துடன் திட்டமிட்டபடி சேர்ந்து வாழ முடியவில்லையே என கோபத்தில் இருக்கிறரா என்பதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அளவில் தான் அபிராமி உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது அவருடைய செயல்பாடு புழல் சிறையில்..!