யார் இந்த விஜய பிரபாகரன்? விஜயகாந்த் மகனின் சொத்து மதிப்பு என்ன?
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் வருகிற 27ஆம் தேதியாகும். இந்த நிலையில், நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், தமிழகத்தின் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 400க்கும் மேற்படோர் மாநிலம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மறைந்த அக்கட்சியின் நிறுவனர் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.
ரெம்போ கவனமா இருக்கனும்: எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு!
அதன்படி, ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.6.57 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக விஜயபிரபாகரன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தனது தாய் பிரேமலதாவுக்கு ரூ.6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.48 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக விஜயபிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டில் போட்டியிட்ட போது ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனக்கு உள்ளதாக தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்தின் தனது சொத்து மதிப்பு ரூ.19.37 கோடி என தனது வேட்புமனுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.