சமையல் கேஸ் சிலிண்டர் புதிய விலை என்ன.? தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கான விலை பட்டியல் வெளியீடு
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 200 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் 14 கிலோ கொண்ட சமையல் எரிவாயு விலை 918 ரூபாயும், அதிகபட்சமாக நாகர்கோவிலில் 987 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை என்ன.?
தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்திருந்தது. 200 ரூபாய் குறைப்பிற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதே போல உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு பிறகு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலிண்டரின் விலையில் மாறுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விலை பட்டியல்
அந்த வகையில் சென்னையில் 918 ரூபாயும், மதுரையில் 944 ரூபாயும், கோவையில் 932 ரூபாயும், காஞ்சிபுரத்தில் 921 ரூபாயும் விலையில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. ஈரோட்டில் 937 ரூபாயும், கடலூரில் 939 ரூபாயும், தர்மபுரியில் 941 ரூபாய், தஞ்சாவூரில் 939 ரூபாய்க்கும் சமையல் எரியும் வாயுவானது பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தேனியின் 960 ரூபாய், திருவாரூர் 924 ரூபாய், கரூர் 957 ரூபாய், திருவண்ணாமலை 918 ரூபாய், திருப்பூர் 940 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் சிலிண்டர் விலை என்ன.?
திருச்சியில் 949 ரூபாயும், திண்டுக்கல்லில் 945 ரூபாயும், திருநெல்வேலியில் 968 ரூபாய் 50 காசுக்கும், நாகர்கோயிலில் 987 ரூபாய்க்கு சமையல் எரிவாயு விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் 958 ரூபாயும், நீலகிரியில் 949 ரூபாயும், நாமக்கல் 949 ரூபாய், வேலூரில் 940 ரூபாய், ராமநாதபுரத்தில் 952 ரூபாய், சிவகங்கையில் 958 ரூபாய், விருதுநகரில் 944 ருபாய் என சமையல் எரிவாயு விலை ஆனது பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்