தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியின் திட்டங்கள் என்னென்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!

பிரதமர் மோடி பாஜகவின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.

What are the welfare schemes for Tamil Nadu under Modi Govt? Annamalai releases white report sgb

பாஜகவின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நலனுக்காக நிறைவேற்றி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு ஆட்சியில், தமிழகத்திற்கு போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய் என்பதை பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை மூலம் நிரூபிக்க விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

"திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான்" என்று விமர்சித்துள்ள அண்ணாமலை, "மு.க.ஸ்டாலின் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை தனது ட்வீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?" என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை தனது வெள்ளை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக வெளியிட்டுள்ளார். இரண்டு மொழிகளிலும் அறிக்கையைப் படிப்பதற்கான இணைப்புகளை தனது ட்விட்டர் பதிவில் கொடுத்திருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios