Wedding pampered 12th tayakki student arrested for cheating

மானாமதுரை

திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி, +2 மாணவியை தாயக்கி ஏமாற்றியவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கார்த்திக் (23). இவர் தனது உறவினர் மகளான பன்னெரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் தவறாக நடந்துள்ளார்.

இதனால் கர்ப்பமான அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் கார்த்திக் காலம் தாழ்த்தி அந்த மாணவியை ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அந்த மாணவி எட்டு மாத கர்ப்பிணியானார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த கார்த்திக்கை கைது செய்தனர்.