கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் சில் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் சில் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கடலோர மாவட்டங்கள்,தென்மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை, தமிழகம் , புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தழிழக வட கடேலார மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமாக மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் 

நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய தினங்களில் தமிழகம், புதுவை, காரைகால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையில் அளவு திருப்பூண்டி( நாகப்பட்டினம்),நாகப்பட்டினம்(நாகப்பட்டினம்), வேதாரண்யம்(நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காரைக்கால், திருகுவளை(நாகப்பட்டினம்) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.