Asianet News TamilAsianet News Tamil

"தாய் மொழியை நேசிப்பதில் நாம் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" சித்தராமையா அறிவுரை...

we must learn from the tamil people
we must-learn-from-the-tamils-in-loving-their-mother-to
Author
First Published May 15, 2017, 7:44 PM IST


தாய் மொழியை நேசிப்பதில் நாம் தமிழர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று முன்தினம் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா போசியதாவது; கன்னட மொழி பற்றி கன்னடர்கள் அலட்சியமனப்போக்குடனே நடந்து கொணடு வருகிறார்கள். எனவேதான் இப்போது தாய் மொழி மீது பற்று ஏற்படுத்த அரசு முயர்சி செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. கன்னடத்திற்கு தனியாக வளர்ச்சி ஆணையம் அமைத்து மொழி வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்.

தாய் மொழியை நேசிப்பதில் நாம் தமிழர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் மொழியை உயிரைவிட உயரவாக நேசிப்பார்கள். அவர்களை பார்த்து நாமும் நமது தாய்மொழியை எப்படி கௌரவிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு அவர்களின் மொழி மீது பற்று அதிகம், நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் உங்களுக்கு தமிழில் தான் பதிலளிப்பார்கள். அங்கு தமிழ் கற்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு பெங்களுருவில் அப்படி கிடையாது, தமிழர்களை பின்பற்றி கன்னடா சூழ்நிலையை வளர்க்க விரும்புகிறேன். குறிப்பாக பெங்களுருவில் அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். பிற மாநில மக்களுக்கு தாய் மொழிக்கு கெளரவம் கொடுக்கிறார்கள்.

மேலும் அவர் பேசும்போது, கன்னத்தை ஆட்சி மொழியாக நடைமுறை படுத்த கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன். என்னிடம் வரும் கோப்புகளுக்கு நான் கன்னடத்தில் தான் கையெழுத்திடுகிறேன். ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை திருப்பியனுப்பி விடுவேன் என்றார்.

எல்ல நிர்வாக அதிகாரிகளும் கன்னடத்தையே பயன்படுத்த வேண்டுமென கடந்த முப்பது ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தாலும் எந்த பயனும் ஏற்படவில்லை என வருத்தத்துடன் பேசினார்

Follow Us:
Download App:
  • android
  • ios