Asianet News TamilAsianet News Tamil

டெங்குவை விரட்ட நிலவேம்பு கஷாயத்தை இப்படி தான் தயாரிக்க வேண்டும்!

டெங்கு அறிகுறிகள் என்ன ..? டெங்கு வராமல் எடுக்க வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கை என்ன என்பதையும் இதற்கு முன்னதான பதிவில் நாம் தொடர்ந்து பார்த்தோம்.

we have to prepare nilavembu kashatyam properly
Author
Chennai, First Published Jan 26, 2019, 1:29 PM IST

டெங்கு அறிகுறிகள் என்ன ..? டெங்கு வராமல் எடுக்க வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கை என்ன என்பதையும் இதற்கு முன்னதான பதிவில் நாம் தொடர்ந்து பார்த்தோம்.

தற்போது, டெங்குவால் பாதித்த வுடன், நாம் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் ரத்த தட்டணுக்கள் குறையாமல் பார்த்துக்கொண்டு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற புரிதல் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். 

சரி வாங்க.. டெங்குவின் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள நிலவேம்பு கசாயம் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

we have to prepare nilavembu kashatyam properly

2006 ஆம் ஆண்டு, சிக்கன் குனியா பாதிப்பு அதிகமாக இருந்த போது, தமிழக அரசால் நிலவேம்பு குடிநீரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது.  தற்போது டெங்குவிற்கும் மிக சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயம் இருப்பதால், பெரும்பாலோனோர் நிலவேம்பு கசாயத்தை அருந்த தொடங்கி உள்ளனர்.

என்னதான் மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தாலும், கூடவே நிலவேம்பு கசாயம் குடிப்பதையும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை அரசும் அங்கீகரித்து உள்ளது.  நிலவேம்பு குடிநீர் என்பது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்..

நிலவேம்பு என்பது வெறும் நிலவேம்பு இலையை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது மட்டுமல்ல. அதனுடன் வெட்டி வேர், விலாமிச்சை வேர்,பேய்புடல், பற்படாகம், சந்தனத்தூள், சுக்கு, மிளகு ஆகியவை கலந்து செய்யப்படுவதே நிலவேம்பு குடிநீர். ஆனால் ஒரு சிலர் நிலவேம்பு கசாயத்தை வெறும் நிலவேம்பு கொண்டு தயாரித்து அதனை பருகி வருகிறார்கள்.

we have to prepare nilavembu kashatyam properly

ஆனால் இத்தனை வேர்களும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படுவதுதான் நிலவேம்பு என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயத்தை தயாரித்த பின், எப்படி குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நிலவேம்பு கசாயம் தயாரித்து மூன்று மணி நேரத்திற்குள் அதை குடித்துவிடவேண்டும். நேரம் செல்ல செல்ல நிலவேம்பு கசாயத்தில் உள்ள வீரியம் குறைந்துவிடும். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு கசாயத்தை குடிக்கலாம்.

12 வயதிற்குள் என்றால், 30 மில்லி வரை குடிக்கலாம். காய்ச்சல் வராதவர்கள் இதுபோன்று குடித்துவரலாம். ஒருவேளை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை நிலவேம்பு கசாயத்தை அருந்துவது சிறந்தது.  எனவே  நிலவேம்பு கசாயம் என்பது, நோய் கிருமிகளை அழித்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

Follow Us:
Download App:
  • android
  • ios