தாங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவதாகவும், எஸ்மா, டெஸ்மா என எத்தகைய சட்டத்தைக் கொண்டுவந்து அடக்கப் பார்த்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்  என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கடந்த 7 ஆம் தேதி அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தடை விதித்தது. ஆனால் தடையை மீறி இன்று ஜாட்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு  ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள், அரசு தரப்பை விசாரிக்காமல் எங்கள் போராட்டத்தை நீதின்றம் தடை செய்திருக்கக்கூடாது என தெரிவித்தனர்.

முன்பு இதே போன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா போராடிய தங்கள் மீது எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினார். ஆனால் என்ன நடந்துது ? தற்போது நாங்கள் பதவி உயர்வுடன் நன்கு பணிபுரிந்து  வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் எங்கள் மீது எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சிய ஜெயலலிதாதான் அடுத்த தேர்தலில் காணாமல் போனார் என குறிப்பிட்டனர்.

தற்போது தங்களது போராட்டம் தொடரும் என்றும், எஸ்மா, டெஸ்மா சட்டத்திற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.