we cant write the neet examination after 25 years

25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத அனுமதி இல்லை..! அதிரடி காட்டும் டெல்லி உயர்நேதிமன்றம்..!

இந்திய மருத்துவ கவுன்சில்அறிவிப்பை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத அனுமதி இல்லை என தெரிவித்து உள்ளது. அதாவது,பொதுப் பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத முடியாது என்றும், இட ஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருந்தது.

மருத்துவ கவுல்சிலை அறிவிப்பை எதிர்த்து கேரளாவை சேர்ந்த இருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது

இதன் மூலம் இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஏற்கனவே நீட் தேர்வு வேண்டாம் என்று ஒரு பக்கம் போராட்டம் வலுத்து வரும் நிலையில்,இது போன்று பல கட்டுப்பாடுகள் மற்றும் புதிய புதிய விதிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.