we are wasting the eater in the river palaru

பாழா போகுது பாலாற்று நீர்.....தடுக்க தடுப்பணை இல்ல...ஆனால்
கர்நாடகா கிட்ட தொங்கு தொங்குன்னு தொங்கறது தான் வேலை.....

தமிழகத்தில் மழை இல்லை... விவசாயம் இல்லாமல் மிகவும் வறண்டு விட்டது....வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் நிதி கேட்க வேண்டும் என மட்டும் தொடர்ந்து முயற்சி செய்த தமிழக அரசிற்கு, தண்ணீர் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எதற்காக தமிழகம் வறண்ட மாநிலமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டது ? இதை பற்றி எல்லாம சிந்திக்க தெரியாதா என்ன ? 

அதற்கு பதிலாக, வேறு மாநிலத்தில் அணை கட்டினால் கூட அதற்கு போராட்டம் செய்ய தெரிந்த நம்மவருக்கு, தமிழகத்தில் தடுப்பணை கட்ட வேண்டுமே என்பதில் சிந்தை செல்லாதது ஏனோ?

பாழா போகுது பாலாற்று நீர்

சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி தான்...ஆனால் அந்த தண்ணீரை தடுக்க சொற்ப அளவில் தான் தடுப்பணைகள் உள்ளது.

ஆனால் ஆந்திராவில் இருந்து 22 தடுப்பணைகளும் நிரம்பி, மீதமுள்ள தண்ணீர் தான் பாலாற்றில் தற்போது பெருக்கெடுத்து ஓடுகிறது.இதற்கு காரணம் கடந்த வாரம் ஆந்திராவில் பெய்த கனமழை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் இருந்து வந்து தமிழக பாலாற்றில் கலக்கும் இந்த நீர் வேலூர் வழியாக, காஞ்சிபுரம் சென்றடைந்து பின்னர் கடைசியாக கடலில் தான் கலக்கிறது.

2 லட்சம் தென்னை மரங்கள் அழிந்தது

பாலாற்றில் தண்ணீர் வராத கடந்த காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேலான,ஆற்றங்கரையோர பகுதியில் இருந்த தென்னை மரங்கள் அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது 

ஆக்கிரமிப்பு 

மேலும்,பாலாற்றில் அதிக மணல் அள்ளி,பெரிய அளவில் ஆங்காங்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால்,அந்த பள்ளங்கள் எல்லாம் நிரம்பி நிரம்பி மெதுவாக செல்வதற்கே நேரம் அதிகமாகி விடும். மேலும் இது போன்ற காரணத்தால் நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக தண்ணீர் 

ஆக மொத்தத்தில், தடுப்பணைகளும் குறைவு,எரியும் நிரம்ப முடியாது.... ஆனால் பிற்காலத்தில் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என மட்டும் போராட முடியும்....

பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணும்னா எப்படி?

சட்டபடி எந்த அளவிற்கு கர்நாடக காவிரி நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டுமோ ...அது கண்டிப்பாக தமிழகத்திற்கு கிடைத்து தான் ஆக வேண்டும்...அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது ...

அதே வேளையில், தற்போது பாலாற்று நீரை தடுத்து, தமிழக விவசாயத்திற்கு சேமித்து வைக்க கூட தடுப்பணைகள் இல்லையே இதற்கு என்ன பதில் கடைக்கும்.....