சென்னை அமைந்தகரையில் பாலத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அமைந்தகரை உள்ள தனியார் வணிக வளாகம் (Skywalk) அருகே உள்ள பாலத்தில் தனியார் ஹோட்டலுக்கு சொந்தமான தண்ணீர் லாரி இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை.

ஸ்டீரிங் பழுதடைந்ததால் லாரி நிலை தடுமாறி கவிந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்தனர். ஜே சி பி இயந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பாலத்தில் வாகனபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு லாரியை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து தொடங்கியது. விபத்து குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
