தேனி

முல்லைப் பெரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாசன கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் முதற்போக விவசாயத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனர்.

நாற்றாங்கால் கருக ஆரம்பித்துள்ள நிலையில் சரியான நேரத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.