சென்னை ஆலந்தூரை தலைமையிடமாக செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஆழகர் (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.

இவர், இரவு நேர பணியை முடித்துவிட்டு, நேற்று காலை 8 மணியளவில் சீருடையிலேயே மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, திடீரென கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு, லைடர் மூலம் தீ வைத்து கொண்டார். 

உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்தார். அவ்வழியாக சென்றவர்கள், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், 108 ஆம்புலன்சில், அழகரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அழகர் எதற்கான தற்கொலைக்கு முயன்றார். குடும்ப பிரச்சனையால் தீக்குளித்தாரா அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.