தி.மு.க.வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம்: அண்ணாமலை
காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரஸ், தி.மு.க., அதிகாரத்துக்கு வரக்கூடாது. விவசாயிகள் தி.மு.க.,வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என அண்ணாமலை சொல்கிறார்.
தி.மு.க.வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி மன்றத்தில் 400 எம்.பி.,களுடன் அமரும் போது, நம்முடைய பங்கை ஆற்ற வேண்டும் என இந்த கூட்டணி உருவாகியுள்ளது. நம்முடைய ஆட்சி விவசாயிகளுக்காக நடந்துக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன்னை போலி விவசாயியாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
காவிரி பிரச்னை தொடர்பான தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டாலும், ஆணையம் அமைக்கப்படவில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் 2018ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த வரை காவிரி நீரை யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்லாமல், மேதாதுவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அணையைக் கட்ட அனுமதி கிடையாது என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அழுத்தம் கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை. இந்நிலையில், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க.,வும் ஆட்சியில் இருந்தால் காவிரியில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. இருவரும் பிற்போக்கான ஆட்சி செய்து வருகின்றனர்.
எனவே, பா.ஜ.,வுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால் இப்பகுதியை வலிமைப்படுத்தும். காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரஸ், தி.மு.க., அதிகாரத்துக்கு வரக்கூடாது. விவசாயிகள் தி.மு.க.,வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு பெரிய பாவம் செய்கிறோம் என்பதை உணர வேண்டும். விவசாய மக்களை நாம் சந்திக்க வேண்டும். இத்தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் வலிமைமிக்க பாரதம் உருவாக்கும். அதற்கான வாய்ப்பை பிரதமர் மோடிக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.
தி.மு.க., பேசக்கூடிய எல்லாம் செருப்புக்கு சமம். ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் எத்தனை பேர் உயிர் இறந்தார்கள். அவர்களுடைய குழந்தைகளை எங்கே. யாராவது தி.மு.க.,வில் பொறுப்பில் இருக்கிறார்களா? இல்லை இந்திய மொழி எதிர்ப்பு போராட்டத்தின் போது தீக்குளித்து யார் இறந்தார்களோ அவருடைய குழந்தைகள் யாராவது எம்.எல்.ஏ., எம்.பி., இருக்கிறார்களா. அவர்களை வைத்து அரசியல் செய்து உங்களுடைய குழந்தைகள் தான் இன்னைக்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்கள்.
தி.மு.க., வுக்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது யார் உயிர் இருந்தார்களோ அவர்களை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையுமே இல்லை. அதனால தான் ஈ.வே.ரா., அந்த காலத்திலேயே சொன்னார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், பொது சொத்தை தேசப்படுத்திய நான்கு காளிகளை சுட்டு இருக்க வேண்டும் என இவ்வாறு அவர் பேசினார்.
மனைவியை பேய், பிசாசுன்னு சொன்னா தப்பு இல்லையாம்! பாட்னா உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்!